கடற்கரை - செங்கல்பட்டு  ரயில்
எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

கடற்கரை - செங்கல்பட்டு ரயில் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில் வெள்ளிக்கிழமை (மே 17) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் அவ்வப்போது சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 17) கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் பிற்பகல் 3.05 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும்

ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என சென்னை ரயில்வை கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com