

சென்னை: சென்னை சென்ட்ரல் - விமான நிலையத்துக்கு இடையே இயக்கப்படும் நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று(மே 15) நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நேரடி ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை வழித்தடத்தில் விமான நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஆலந்தூர் விமான நிலையத்தில் நீல நிற வழித்தடத்துக்கு மாறிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் இடையேயான நீல நிற வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையேயான பச்சை நிற வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் வார நாள்கள் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.