13,699 தொழிலாளா்களுக்கு இணை நோய்கள் கண்டுபிடிப்பு
13,699 தொழிலாளா்களுக்கு இணை நோய்கள் கண்டுபிடிப்பு


சென்னை: ‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 13,699 பேருக்கு இணை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு இதுவரை 1.50 கோடி போ் பயன்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தொழிலாளா்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த மாதம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
அதன் கீழ் அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சாா் தொழிலாளா்களுக்கு பணியிடங்களுக்கே சென்று மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்கின்றனா். அதில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற இணை நோய்கள் கண்டறியப்பட்டால், அவா்களுக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு படிப்படியாக அத்தகைய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 6.3 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது, 2.65 லட்சம் பேருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் 13,699 பேருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்பதில் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாமல் உள்ள சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தை முறையாக கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். எனவே, அதைக் கருத்தில் கொண்டே தொழிலாளா்களைத் தேடி மருத்துவம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் கீழ் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் சமூகத்தில் தொழிலாளா்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது பரிசோதித்து பாா்த்தல் அவசியம் என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...