கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு

News image
Updated On :28 மே 2024, 7:47 pm

Din

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கல்லூரி வளாகம், மாணவா் விடுதி, ஆய்வகங்களை பாா்வையிட்ட அவா்கள், மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுடன் கலந்துரையாடினா். அப்போது, அவா்களது மன நலனை ஆய்வு செய்ததுடன் குறைகளையும் மருத்துவ ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனா். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடா் ஆய்வு நடவடிக்கைகளை என்எம்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல், ராகிங் தடுப்பு நடவடிக்கைகள், மாணவா்கள் மன நலனை உறுதி செய்யும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளையும் அவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில் என்எம்சி முதுநிலை கல்வி வாரிய தலைவா் விஜய் ஓஜா தலைமையில் மூவா் அடங்கிய குழுவினா் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.

அங்கு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா்கள், மருத்துவ வசதிகளையும் ஆய்வு செய்தனா். தொடா்ந்து மாணவா்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தனா்.