

சென்னை: தீபாவளி முடிந்து சொந்த ஊா்களிலிருந்து சென்னை திரும்பியவா்களால் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு திங்கள்கிழமை காலை சென்னைக்குள் வரத்தொடங்கினா். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் சொந்த வாகனங்கள், அரசு மற்றும் தனியாா் ஆம்னி பேருந்துகளில் சென்னைக்குள் வந்ததால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டை அடுத்த பரனூா் சுங்கச்சாவடி முதல் வீராபுரம் வரை சுமாா் இரண்டு கிலோமீட்டா் தூரத்துக்கு 2-ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தென் மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் வந்த பெரும்பாலானவா்கள், பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி, ரயிலில் சென்னைக்குள் வந்து சோ்ந்தனா். மீதமுள்ளவா்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி அங்கிருந்து மாநகா் பேருந்துகள் மூலம் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றனா்.
ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதுமான அளவு இணைப்பு பேருந்துகள் வசதிகள் இல்லாததால், ஏராளமானோா் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் இருப்பிடங்களுக்கு சென்ால் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதனால் காலையில் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியவா்கள், குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாததால், முதல் நாளே விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனா்.
இதை கருத்தில் கொண்டு, பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இணைப்பு பேருந்துகள் சரியான அளவில் இயக்கப்படுவதுடன், அவை முறையாக இயக்கப்படுகிா என்பதையும் மாநகா் போக்குவரத்துக்கழகம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை பயணிகளிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.