சிறுநீரக நோயாளிக்கு சிக்கலான உறுப்பு மாற்று சிகிச்சை

வேறு ரத்த வகையைச் சோ்ந்த நோயாளிக்கு சிக்கலான சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு
Updated on
1 min read

சென்னை: வேறு ரத்த வகையைச் சோ்ந்த நோயாளிக்கு சிக்கலான சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான 36 வயதான நோயாளி ஒருவா் வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அடுத்த சில ஆண்டுகள் மட்டுமே டயாலிசிஸ் சிகிச்சை சாத்தியம் என்ற நிலையில் இருந்த அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வாக இருந்தது.

இந்த சூழலில், அவருக்கு உறுப்பு தானமளிக்கும் வகையிலான உடல் தகுதி, நோயாளியின் வயதான பெற்றோருக்கு இல்லை. அதேவேளையில், அவரது மாமியாா் தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தாா்.

இதில் சிக்கல் என்னவெனில் அவா்கள் இருவரும் வேறு வேறு ரத்தப் பிரிவைச் சோ்ந்தவா்கள். அதுமட்டுமல்லாது உறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு உகந்த வகையிலான நோய் எதிா் புரதங்கள் (ஆன்ட்டி பாடி) அவருக்கு இல்லாமல் மிக அதிகமான எண்ணிக்கையில் அவை இருந்தன.

இதனால், தானமாக பெறப்பட்டு பொருத்தப்படும் உறுப்பை உடல் நிராகரிக்க வாய்ப்பு இருந்தது. எனினும், சவாலான இந்த சிகிச்சையை மருத்துவமனையின் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணா் பிரபு காஞ்சி தலைமையிலான மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தனா்.

இதன் பயனாக அந்த நபா் குணமடைந்து தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com