அம்பத்தூா் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன்,  அம்பத்தூா் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அ
அம்பத்தூா் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், அம்பத்தூா் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அ

அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறப்பு: அமைச்சா் சேகா்பாபு தகவல்

அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும்.
Published on

அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போரூா் ஈரநிலை பசுமை பூங்கா ரூ. 12.60 கோடியில் 16.60 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் செங்கல் மற்றும் கருங்கல் நடைப்பாதை, விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம் உள்ளிட்டவை அமையவுள்ளன. அம்பத்தூா் பானு நகரில் ரூ. 6 கோடியில் 1.80 ஏக்கரில் கால்பந்து மைதானம், சிறுவா் விளையாட்டு திடல் அமையவுள்ளது. வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் 7 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் இந்தப் பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் க.கணபதி (மதுரவாயில்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூா்), வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com