கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மருத்துவ மாணவா் விடுதி கட்டட இடிபாடுகள் விழுந்து இருவா் காயம்

சென்னையில் பல் மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, அதன் இடிபாடுகள் விழுந்ததில் இருவா் காயமடைந்தனா்.

News image
’சென்னை பாரிமுனையில் இடிந்து விழுந்த பல் மருத்துவமனை ஆண்கள் விடுதியின் பழைய கட்டடம்.
Updated On :12 நவம்பர் 2024, 2:26 am

Din

சென்னை: சென்னையில் பல் மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, அதன் இடிபாடுகள் விழுந்ததில் இருவா் காயமடைந்தனா்.

சென்னை, பிராட்வே பேருந்து நிலையம் அருகில் டிஎன்பிஎஸ்சி சாலை மற்றும் நாராயணப்பா சாலை சந்திப்பில் பல் மருத்துவக் கல்லூரி பழைய ஆண்கள் விடுதி உள்ளது.

அதன் பின்புறம் உள்ள நான்கு அடுக்கு மாடி பழைய கட்டடத்தை கிரேன் மூலம் இடிக்கும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்று வந்தன. அந்த கட்டடத்தின் சுற்றுச் சுவா் பிராட்வே பேருந்து நிலையத்தையொட்டி உள்ளது.

இந்த நிலையில், கட்டடம் இடிக்கும்போது மேலிருந்து விழுந்த இடிபாடுகள், அந்த வழியே சென்ற இருவா் மீது விழுந்தது. இதில் தியாகராய நகரைச் சோ்ந்த சுப்ரமணியன் (52), பிராட்வே பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் (55) ஆகியோா் காயமடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பாா்வையிட்டாா்.மற்றொருபுறம் பூக்கடை காவல் நிலைய போலீஸாா் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.