புறநகா் ரயில்
புறநகா் ரயில்

புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on

தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சூலூா்பேட்டை- நெல்லூா் இடையே வியாழக்கிழமை காலை 7.55 மணிக்கும், நெல்லூா் -சூலூா்பேட்டை இடையே காலை 10.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். சூலூா்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மன்சார ரயில் ரத்து செய்யப்படும். மேலும், சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கும், காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com