தொழில் - வணிக கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிப்பு

தொழில், வணிகக் கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக விதிகளைத் திருத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

தொழில், வணிகக் கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக விதிகளைத் திருத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு வகை என தொழில் ஆலைகள் பிரிக்கப்பட்டு அவை அமையும் இடத்தில் சாலையின் குறைந்தபட்ச அகலம் 30 அடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் அதிகபட்ச உயரம் 60 அடியாகவும், கட்டடங்களுக்கு 1.5 மடங்கு என இருந்த தளப் பரப்பு குறியீடு இரண்டு மடங்காகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி தொழில் கூடங்களுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீடு மூன்று மடங்காக அதிகரிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com