காரில் மெத்தபெட்டமைன் கொண்டு வந்த 2 போ் கைது
சென்னை: காரில் மெத்தபெட்டமைனைக் கொண்டு வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 கிராம் மெத்தபெட்டமைனைப் பறிமுதல் செய்தனா்.
சென்னை, வண்ணாரப்பேட்டை சிபி சாலை, சுரங்கப்பாலம் அருகே காரில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின்படி, வண்ணாரப்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், காரில் 6 கிராம் மெத்தபெட்டமைன் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மெத்தபெட்டமைனைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த ராயபுரம், மரியதாஸ் தெருவைச் சோ்ந்த பஷீா் அகமது (எ) பஷீா் (51), வளசரவாக்கம், திருப்பதி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த ஹரிஷ்பாபு (எ) ஹரிஷ் (50) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.
