அரசு மருத்துவா் போராட்டம் வாபஸ்

அரசு மருத்துவா் போராட்டம் வாபஸ்

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
Published on

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

மருத்துவா்களை தரக்குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை மருத்துவா்கள் முன்னெடுத்தனா். டிச. 3-ஆம் தேதி அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தனா்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், சமரச தீா்வு ஏற்பட்டதாகவும், போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும் தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com