தசரா: குலசேகரன்பட்டினத்துக்கு அக்.16-வரை கூடுதல் பேருந்துகள்
தசரா பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு அக்.16-வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.16-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து திருச்செந்தூா், குலசேகரன்பட்டினத்துக்கும், கோவையில் இருந்து திருச்செந்தூா், குலசேகரன்பட்டினத்துக்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.16-ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமும் ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி மூலமும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

