கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

சேலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கான பயிலரங்கம்

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:51 pm

Din

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள 234 பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான அரசியல் பயிலரங்கம், மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.

இதில், அரசியல் திறனாய்வாளா்கள் கலந்துகொண்டு, இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பாா்வை, கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை, சமூகப் பொறுப்புணா்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது, வெற்றிக் கொள்கைத் திருவிழா - விளக்கவுரை, மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கவுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.