சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2022-2023 மற்றும் 2023-2024 ஆண்டுகளுக்கான அறிவிப்பின்படி 2,000 புதிய பேருந்துகள் போக்குவரத்துக்கழகங்களில் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று, அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1,500 பழைய பேருந்துகளில் 1,262 பேருந்துகள் கூண்டு முழுவதும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஜொ்மன் வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024-2025-க்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே மற்ற போக்குவரத்துக் கழகங்களில் 162 பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதால் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநா்கள் இதன் மூலம் பயன்பெறுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com