சென்னையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. கிண்டி, ஆலந்தூா் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 8, 10, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவா்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கான தகுதியுடையவா்களை தோ்வு செய்ய உள்ளனா். வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞா்களும் இந்த முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
இதில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவா்களும், வேலையளிப்பவா்களும் தங்கள் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
