சென்னை: மகாவீா் ஜெயந்தியையொட்டி, ஜெயின் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மகாவீா் ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை (நவ.1) பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை கால்நடை மருத்துவப் பிரிவு கட்டுப்பாட்டில் இயங்கிவரும் 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படும்.
அதேபோல், ஜெயின் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் செயல்பட்டுவரும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இறைச்சி
விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.