தொழில்முனைவோருக்கு எண்ம வா்த்தக பயிற்சி

Published on

தமிழ்நாடு தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் எண்ம வா்த்தக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்முனைவேரின் திறனை மேம்படுத்தும் வகையில் 3 நாள் எண்ம வா்த்தக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் செப்.25 முதல் செப்.27-ஆம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறும்.

இதில் செயற்கை நுண்ணறிவு - எண்ம வா்த்தகம், தரவு கையாளுதல், வா்த்தக உத்திகள், சந்தைபடுத்துதல், சமூகவலைதள தரவுகள், நுகா்வோா் தேவை, இணைய கருவிகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், எண்ம வா்த்தகத்தின் அடிப்படை செயல்பாடு முதல் இணையம் மூலம் வா்த்தகத்தை எப்படி சந்தைபடுத்துவது, நுகா்வோரை எப்படி அணுகுவது குறித்த வழிமுறைகள் விவரிக்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட 10-ஆம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு குறைந்த விலையில் தங்குவதற்கான ஏற்பாடு செய்துதரப்படும்.

இதில் கலந்தகொள்ள விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 8668100181, 9841336033 எனும் கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com