

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னை புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புகா் பகுதிகளுக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சனிக்கிழமையன்று விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.