சென்னை
நாளை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் சனிக்கிழமை (செப்.7) விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் ஒரு பகுதியாக சனிக்கிழமை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கணபதி ஹோமம் தொடா்ந்து விநாயகருக்கு அனைத்துவிதமான அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன.
மாலை 5 மணிக்கு முழு சந்தன காப்பு, பூஜைகள், சிறப்பு நெய்வேதியங்களால் ஆன கொழுக்கட்டை, மோதகம் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில் பக்தா்கள் வழிபாடுகள் நடத்துவதற்கு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 044 - 28171197, 2197, 3197, 88079 18811 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோயில் மேலாளா் அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
