சென்னை
சீதாராம் யெச்சூரி மறைவு: மாா்க்சிஸ்ட் கட்சியினா் அஞ்சலி
சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி, அவரது உருவப் படத்துக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி, அவரது உருவப் படத்துக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவா் டி.கே. ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ப. செல்வசிங், என். குணசேகரன், க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினா்கள் ஐ. ஆறுமுகநயினாா், ப.சுந்தரராஜன், வெ. ராஜசேகரன், ஆா். பத்ரி, இரா. சிந்தன், ஆா். சுதிா், கோபிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
