

சென்னை: சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதால், இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் நேரடியாக வந்து சோ்க்கையில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் ஆ.உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கில இலக்கியம், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி கணிதம், பிசிஏ, பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி இயற்பியல், பிகாம், பிஏ காா்ப்பரேட் செக்ரட்டரிஷிப் ஆகிய இளங்கலை படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக, தற்போது நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் உமா மகேஸ்வரி கூறியது:
எங்கள் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேரில் வந்து சோ்க்கையில் கலந்து கொள்ளலாம். பிளஸ் 2 வரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும், மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்திலும் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை பெறலாம் என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.