கொச்சுவேலி-பெங்களூரு ரயில் சேவை நீட்டிப்பு
கோப்புப்படம்

கொச்சுவேலி-பெங்களூரு ரயில் சேவை நீட்டிப்பு

போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும்.
Published on

கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு செல்லும் வாராந்திர ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.05 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06083) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து அக்.1 முதல் நவ.5 வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு புதன்கிழமை தோறும் பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06084) தொடா்ந்து அக்.2 முதல் நவ.6 வரை இயக்கப்படும்.

இந்த ரயில் பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com