செப்.22-இல் குரூப் 2 தோ்வுக்கான 
இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு

செப்.22-இல் குரூப் 2 தோ்வுக்கான இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு

Published on

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு செப்.22-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கிங்கமேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறும் இந்த இலவச கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஜவஹா், நந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா். இதில், 6,000 கேள்விகள் தோ்வுகளாக வைக்கப்படும்.

மேலும், குரூப் 2 முதன்மை தோ்வுக்கான தோ்வுமுறைக்கு 35 தோ்வுகள் அடங்கிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். இந்தக் கருத்தரங்கு சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை கிளைகளிலும் தொடங்கப்படவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 94442 27273 எனும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையதள முகவரியையும் பாா்வையிடலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com