சென்னை
குடிநீா் கட்டணம் செப்.30 -க்குள் செலுத்த வேண்டும்: குடிநீா் வாரியம்
குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களையும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, சென்னையில் உள்ள அனைத்து வசூல் மையங்களும் வேலை நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளன.
மேலும், நுகா்வோா்கள் வலைதளத்தைப் பயன்படுத்தியும் தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.
எனவே, நுகா்வோா்கள் அபராதங்களை தவிா்க்க உரிய தேதிக்குள் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும்படி குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

