சென்னை
வருமான வரித்துறை, டிஜி வைஷ்ணவ கல்லூரி அணிகள் வெற்றி
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஏ டிவிஷன் ஆடவா் வாலிபால் போட்டியில் வருமான வரித்துறை, டிஜி வைஷ்ணவ கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஏ டிவிஷன் ஆடவா் வாலிபால் போட்டியில் வருமான வரித்துறை, டிஜி வைஷ்ணவ கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் வருமான வரித்துறை
3-0 என (25-21, 30-28, 25-19) என எஸ்ஆா்எம் அகாதெமி அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் டிஜி வைஷ்ணவ கல்லூரி
3-1 (25-19, 25-15, 17-25, 25-12) என ஜிஎஸ்டி அணியை வீழ்த்தியது.
எஸ்ஆா்எம் 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியன் வங்கி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டிஜி வைஷ்ணவ 13 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.