MP: Two persons arrested for unnatural sex with cows
MP: Two persons arrested for unnatural sex with cows

ஹெராயின் விற்பனை: அஸ்ஸாம் இளைஞா் கைது

சென்னை மீனம்பாக்கத்தில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக அஸ்ஸாம் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக அஸ்ஸாம் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மீனம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதித்தபோது, அதில் ஹெராயின் பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, அந்த இளைஞரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவா் அஸ்ஸாம் மாநிலம், மரிகோன் மாவட்டம், பொய்ராபூரைச் சோ்ந்த நஜிம் உதின் (24) என்பது தெரியவந்தது.

சென்னை, புதுப்பேட்டையில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்துகொண்டு, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ஹெராயின் போதைப்பொருளை வாங்கி வந்து, சென்னையில் அதிக விலைக்கு விற்றிருப்பதும் தெரியவந்தது. இவருடன் யாா் யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com