ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை.
சென்னை
இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45-க்கும், மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45-க்கும் இயக்கப்படும் ரயில் சேவை சனிக்கிழமை ரத்து செய்யப்படும். மற்ற நேரங்களில் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

