சென்னை ஐஐடி-யில் புத்தாக்கம், 
தொழில்முனைவு பள்ளி தொடக்கம்

சென்னை ஐஐடி-யில் புத்தாக்கம், தொழில்முனைவு பள்ளி தொடக்கம்

சென்னை ஐஐடி-யில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Published on

சென்னை ஐஐடி-யில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 475-க்கும் அதிகமான புதுயுக தொழில்முனைவு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 11,000-க்கும் மேற்பட்ட பணிகளை உருவாக்கியிருப்பதுடன், 700-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளன. தவிர ரூ.12,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளன.

இந்த நிலையில், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப புதுயுக தொழில்முனைவு நிறுவனங்களுக்கான சூழலை உருவாக்கும் வகையில் சென்னை ஐஐடியில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில் சென்னை ஐஐடி டீன் அஷ்வின் மகாலிங்கம், பல்துறைக் கல்விக்கான பள்ளியின் தலைவா் அன்பரசு மணிவண்ணன், புதிய பள்ளியின் நிறுவனத் தலைவா் பிரபு ராஜகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com