நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்
Center-Center-Kochi

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போதைவிட 4 மடங்கு கூடுதலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்... ஆனால்...
Published on

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு மக்களவையில் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பிஆா்எஸ் மூலம் தற்போது நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி புதிய அம்சங்களை கையாளும் வகையில் வன்பொருள், மென்பொருள், வலைபின்னல், பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்றவை மேம்படுத்துகின்றன.

இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் தற்போதைவிட 4 மடங்கு கூடுதலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரயில்ஒன்’ செயலி மற்றும் புதிய முன்னெடுப்புகள் பயணிகளுக்கு ரயில் சேவையை மிகவும் எளிதானதாக மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com