சென்னை
முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு!
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவானது அண்மையில் முதல் சுற்று கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளை அறிவித்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் டிஎன்பி படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்கள், அதற்கான ஆணையை வரும் 7-ஆம் தேதி மாலை 3 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
இதேபோல, கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசமும் டிச.7-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
