உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கு மாற்றப்பட வேண்டும்: அன்புமணி

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Updated On :2 டிசம்பர் 2025, 1:58 am IST

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையிலும், புகா் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் கடுமையான மழை பெய்து வந்த நிலையில், பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

பல பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவா்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனா்.

டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை அரசு செய்யாததால்தான் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில் சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.