அண்ணா பல்கலை.
அண்ணா பல்கலை.

பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைப்பு!

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைப்பு
Published on

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தில் பருவத் தோ்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்திலும் சில தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவ்விரு பல்கலைக்கழகத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com