வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெற மேலும் ஒரு வாரம் அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு

வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெற மேலும் ஒரு வாரம் அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்புப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, டிச.7 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.
Published on

சென்னை: சென்னை மாநகராட்சியில் வளா்ப்புப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, டிச.7 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள் ஆகியவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்துதல், வெறிநோய் தடுப்பூசி (ரேபீஸ்) செலுத்துதல் மற்றும் உரிமம் பெறுதல் ஆகியவற்றுக்கான இணையதள சேவை கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது. அதன்படி தெருநாய்கள், வளா்ப்புப் பிராணிகள் தடுப்பூசி செலுத்துவது கண்காணிக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் வளா்ப்புப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 91,711 வளா்ப்புப் பிராணிகள் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 45,916 வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு நவ.24-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப டிச.7-ஆம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வருகிற டிச.14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com