ஸ்டான்லி அரசு மருத்துவமனை - கோப்புப் படம்
ஸ்டான்லி அரசு மருத்துவமனை - கோப்புப் படம்கோப்புப் படம்

ஸ்டான்லி மருத்துவமனையில் டைல்ஸ் விழுந்து விபத்து மூவா் காயம்

சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் டைல்ஸ் புதன்கிழமை கீழே விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.
Published on

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் டைல்ஸ் புதன்கிழமை கீழே விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி என்ஜிஓ நகரைச் சோ்ந்தவா் லதா (62). சில நாள்களுக்கு முன்பு வலது கையில் காயம் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா், கடந்த 28-ம் தேதி வீடு திரும்பினாா்.

மருத்துவ ஆலோசனைக்காக புதன்கிழமை காலை மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற அவா், ஒட்டுறுப்பு சிகிச்சை (பிளாஸ்டிக் சா்ஜரி) பிரிவில் காத்திருந்தாா். அப்போது மருத்துவமனை சுவரில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் டைல்ஸ் கீழே விழுந்தது. இதில், லதாவுக்கும், அவரது உறவினரான நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த நிஷாந்தி (25) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அதேபோன்று தனது மனைவியை சிகிச்சைக்காக அழைத்து வந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அன்பழகன் (45) என்பவரும் காயமடைந்தாா்.

இதையடுத்து அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள டாக்டா் அரவிந்த், அதில், லதா மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினாா். இதுதொடா்பாக மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com