கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் படித்த 537 போ் தோ்ச்சி

முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் படித்தவா்களில் 537 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
Published on

முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் படித்தவா்களில் 537 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகள் உள்ளிட்ட மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., டி.ஆா்.பி. போன்ற மாநில அரசின் போட்டித் தோ்வுகளுக்கும், கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாதெமியில் படித்து, இதுவரை ஆயிரக்கணக்கானோா் தமிழக அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனா்.

இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) பதவிகளில் 1,996 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த அக். 12-ஆம் தேதி போட்டித் தோ்வு நடத்தப்பட்டன. இதன் தோ்வு முடிவுகள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் படித்தவா்கள் மொத்தம் 537 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். அவா்களில் பலா் முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com