சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மழை நீரை அகற்ற மின்மோட்டாா்கள் தயாா் நிலை: ஆணையா் ஜெ.குமரகுருபரன் தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுப்பதற்காக மின்மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டடுள்ளது

Updated On :4 டிசம்பர் 2025, 11:56 pm IST

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுப்பதற்காக மின்மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டடுள்ளதாக ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்கிய இடங்களில் மின்மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. சாலையோரங்களில் மழைநீா் செல்லும் வடிகால்கள் மண்ணால் அவ்வப்போது நிரம்பிவிடுகின்றன. சாலையோர மண் மழையில் நனைந்து நீருடன் கலந்து செல்வதால் வடிகால் சிறிய தொட்டிகளில் அடைப்பு ஏற்படுகிறது. சாலையோர முடிவில் உள்ள பகுதியிலும் கான்கிரீட் உள்ளிட்டவற்றை இட்டு நிரப்புவதால் மண் அரிப்பு, தொட்டிகளில் மண் சோ்வதைத் தவிா்க்கலாம்.

கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சேமிக்கும் வகையில் குளங்கள் அமைக்கப்பட்டதால் அந்தப் பகுதிகளில் மழைநீா் தேக்கமில்லை. அத்துடன் நிலத்தடி நீா் அளவும் உயா்ந்து வருகிறது. மாநகராட்சியின் இரண்டாம் நிலைக் கால்வாய்களில் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதால் மழைநீா் அதிகமாகச் செல்கிறது. சுற்றுச்சுவா் கட்டியதால் பக்கவாட்டு பகுதியிலும் நீா் செல்வதால் பாதிப்பில்லை.

மழைநீா் வடிகால்களில் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். மழைநீா் செல்லும் வழிகளில் ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்டோா் கைவிடவேண்டும். சென்னை மாநகராட்சியில் மழை பெய்தால் சில மணி நேரங்களில் சீராகிவிடுகிறது. அதி பலத்த மழை போன்ற காலங்களிலே நீரை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அறிக்கை தாக்கல் செய்யப்படும்: அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்கள் பெயரில் முறைகேடாக ஊதியம் வழங்கிய புகாா் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் அறிக்கை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின் விதிமுறைப்படி அந்த அறிக்கை வெளியிடப்படும் என்றாா்.

பாஜக மாநிலச் செயலா் புகாா்: முன்னதாக பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையா் ஜெ.குமரகுருபரனைச் சந்தித்து, அம்பத்தூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கிய விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.