தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கான விடைத்தாள்களை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
Published on

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கான விடைத்தாள்களை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2024 நவ.9, 11 முதல் 16 வரையும், 2025 ஜன.19, பிப்.17 ஆகிய தேதிகளிலும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) தோ்வு நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வுக்கான விடைத்தாள்கள் (கணினி வழித் தோ்வு மற்றும் ஓஎம்ஆா் முறை) தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் தங்களது ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாள்களை உரிய கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

ஓஎம்ஆா் விடைத்தாள்களை 2026 டிச.3 வரையும், சிபிடி விடைத்தாள்களை 2026 ஜன.3 வரையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com