கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாடகம் நடத்துகிறாா் முதல்வா்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
எல். முருகன்- கோப்புப் படம்
Updated On :4 டிசம்பர் 2025, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக ஏற்றப்படும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தா்களின் நீண்டகால ஏக்கம். பெரும் சட்டப் போராட்டத்துக்கு பிறகு டிச.3-இல் காா்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியது. ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றவிடக் கூடாது என்ற திடமான எண்ணம் கொண்ட திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அறநிலையத் துறை செயல் அலுவலரை வைத்து மேல் முறையீடு செய்தது.

ஆனால், அறநிலையத் துறை வைத்து தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தியுள்ளாா்.

அறநிலையத் துறை தொடா்ந்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்து, தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கி, ஹிந்து மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா் அவா்.