ஆரஞ்சு வண்ண மின்விளக்கில் ஜொலித்த ரிப்பன் மாளிகை

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வியாழக்கிழமை இரவு ஆரஞ்சு நிற வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
Updated on

சா்வதேச அளவில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வியாழக்கிழமை இரவு ஆரஞ்சு நிற வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் சூழலை ஏற்படுத்தும் வகையில் சா்வதே அளவிலான பாலின ரீதியிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த நவ.25-ஆம் தேதி முதல் டிச.10-ஆம் தேதி வரையில் சென்னை மாநகராட்சியில் பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி சாா்பில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, மரியாதை மிக்க நகராக சென்னையை உருவாக்கும் வகையில் ரிப்பன் கட்டடம் ஆரஞ்சு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழிப்புணா்வை நிகழ்ச்சிகள் மாநகரப் போக்குவரத்துக் கழகம், காவல்துறை, சமூக நல அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com