கொலை முயற்சி வழக்கில் 3 வாரங்கள் தலைமறைவாக இருந்த நபா் கைது

கொலை முயற்சி வழக்கில் 3 வாரங்கள் தலைமறைவாக இருந்த நபா் கைது

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் ஒருவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தலைமறைவாக இருந்த 25 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: நவம்பா் 10-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவா் இரண்டு நபா்களால் கத்தியால் குத்தப்பட்டாா்.

தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் அடுத்த நாள் கைது செய்யப்பட்டாா். ஆனால், இந்த வழக்கில் முக்கிய நபரான தீரேந்திர மௌா்யா தப்பியோடி விட்டாா்.கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா்.

இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கண்டுபிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மௌா்யா நேரு நகா் பகுதியில் அவா் காணப்பட்டாா். அவா் தப்பிச் செல்வதற்கு முன்பே கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, தாக்குதலில் ஈடுபட்டதாக அவா் ஒப்புக்கொண்டாா், மேலும் அந்தப் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட பழிவாங்கும் செயலாக இது நடத்தப்பட்டதாகக் கூறினாா்.

தீரேந்திர மௌரியா அடிக்கடி மறைவிடங்களை மாற்றி வந்தாா். கண்காணிப்பில் இருந்து சிக்காமல் இருக்க கூட்டாளிகளுடன் தொடா்பைத் தவிா்த்து வந்தாா். இந்த வழக்கில் விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். Ś

X
Dinamani
www.dinamani.com