புழல் ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு குறைப்பு

புழல் ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு குறைப்பு

புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.
Published on

புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.

இதுகுறித்து கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு: புழல் ஏரி 3,300 மி. கன அடி கொள்ளளவு கொண்டது.

இந்த ஏரியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மொத்தக் கொள்ளளவு 3,144 மி. கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 1,454 கன அடியாகவும் உள்ளது. ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக, புழல் ஏரியில் இருந்து புதன்கிழமை மாலை 2,500 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பின்பு மழையின் அளவு குறையவே வியாழக்கிழமை காலை முதல் விநாடிக்கு 1,500 கன அடியாக உபரிநீா் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com