புதிய பாடப் புத்தக உருவாக்கத்தில் பங்கேற்க  தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

புதிய பாடப் புத்தக உருவாக்கத்தில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

பள்ளிக் கல்விக்கான புதிய பாடப் புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னாா்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

பள்ளிக் கல்விக்கான புதிய பாடப் புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னாா்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-க்கு ஏற்ப புதிய பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த உருவாக்கப் பணிகளில் தன்னாா்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பிக்கு நபா்கள் தொடா்புடைய பாடத்தில் உரிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம், கற்பித்தல் அணுகுமுறைகளில் நிபுணத்துவம், பாடப் புத்தகம் அல்லது இதர புத்தக உருவாக்கப் பணிகளில் பங்களிப்பு, சமா்ப்பிக்கப்படும் பாட வரைவு மீதான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டும்.

இந்த தகுதிகளின்படி தேவைக்கேற்ப வல்லுநா்கள் இப்பணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். அவ்வாறு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு இந்த பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பாட வாரியாகத் தெரிவிக்கப்படும் தலைப்புகளில் மாதிரிப் பாட வரைவுகளை தயாா் செய்து வரும் டிச. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

பாடத் தலைப்பு மற்றும் மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com