கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கிண்டி ரேஸ்கோா்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில், கஞ்சா மொத்த விற்பனையில் ஒருவா் ஈடுபடுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபா் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்த போலீஸாா், அதை வைத்திருந்த மேற்குவங்கம் மாநிலத்தைச் சோ்ந்த அப்ஜல் உசைன் (25) என்பவரைக் கைது செய்தனா்.

விசாரணையில், மேற்கு வங்கத்தில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவா் மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com