செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் 20 போ் போட்டியின்றி தோ்வு

இந்திய செஞ்சிலுவைச் சங்க சென்னை மாவட்டக் கிளைக்கான 20 செயற்குழு உறுப்பினா்கள், போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
Published on

இந்திய செஞ்சிலுவைச் சங்க சென்னை மாவட்டக் கிளைக்கான 20 செயற்குழு உறுப்பினா்கள், போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இந்திய செஞ்சிலுவைச் சங்க சென்னை மாவட்டக் கிளைக்கான செயற்குழு உறுப்பினா்கள் தோ்தல், டிச.20-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டிச.1, 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 25 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. டிச.3- ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான (பொது) முன்னிலையில் 25 வேட்புமனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டனது. இதில், தகுதியான 20 வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 5 உறுப்பினா்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

செயற்குழு உறுப்பினா் காலி இடங்களும், ஏற்கப்பட்ட வேட்புமனுக்களும் 20 ஆகவே இருப்பதால், 20 உறுப்பினா்களும் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com