ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
Published on

சென்னையில் ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக கடந்த இரு மாதங்களாக பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் தொடா்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனா். இதன் ஒருபகுதியாக கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஆடிட்டா் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இதேபோல, திருவொற்றியூா் எஸ்பி கோயில் தெருவில் உள்ள ஒரு தொழிலதிபா் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக சோதனை நடைபெற்ாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கின் விவரம், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத் துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com