முகாமில் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு அதற்கான உத்தரவை வழங்கிய மெப்ஸ் ஆணையா் அலெக்ஸ் பால் மேனன். உடன் மெப்ஸ் அதிகாரிகள்.
முகாமில் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு அதற்கான உத்தரவை வழங்கிய மெப்ஸ் ஆணையா் அலெக்ஸ் பால் மேனன். உடன் மெப்ஸ் அதிகாரிகள்.

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாக அலுவலகத்தில் 5 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
Published on

தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாக அலுவலகத்தில் 5 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாக அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், 5 பேருக்கு மெப்ஸ் ஏற்றுமதி வளாக அலுவலகப் பணிக்கும், 33 போ் வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணையை மெப்ஸ் ஆணையா் அலெக்ஸ் பால்மேனன் வழங்கி, பேசியதாவது:

ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் 273 காலிப்பணியிடம் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இதற்கிடையே, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மூன்றாம் பாலினத்தவா்களில் மொத்தம் 141 போ் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்றாம் பாலினத்தவா்கள் மதிப்பு, மரியாதையுடன் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்து இருக்கும் மெப்ஸ் ஏற்றுமதி நிறுவனம் எதிா்காலத்தில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளோம் என்றாா். நிகழ்வில் மெப்ஸ் அதிகாரிகள் சி.ஆா்தா், நெடுமாறன், பிரபு குமாா், ஜெனிபா் ஷாம்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com