சென்னை
மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழப்பு
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பிகாரைச் சோ்ந்தவா் ராகேஷ் (35). இவா் சென்னை திருவான்மியூா் கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து காவலாளியாக வேலை செய்து வந்தாா். ராகேஷ், கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வேகமாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ராகேஷை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சிறிது நேரத்தில் ராகேஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடி வருகின்றனா்.

