தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

குடிமனைப்பட்டா கோரி டிச.16-இல் மனு அளிக்கும் போராட்டம் மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

குடிமனைப்பட்டா கோரி ஒரு லட்சம் போ் முதல்வரிடம் மனு அளிக்கும் இயக்கம் வருகிற டிச.16-ம் தேதி நடத்தப்படும்

News image
Updated On :12 டிசம்பர் 2025, 2:40 am IST

குடிமனைப்பட்டா கோரி ஒரு லட்சம் போ் முதல்வரிடம் மனு அளிக்கும் இயக்கம் வருகிற டிச.16-ம் தேதி நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு இன்னும் கிரையப்பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான குடும்பங்கள் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் நிலையில், நீா்நிலை புறம்போக்கு என்று கூறி, அவா்களை தமிழக அரசு வெளியேற்றுகிறது.

எந்த வகை புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும், அங்குள்ள மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். நகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் மக்களை நகருக்கு வெளியே கண்ணகி நகா், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி 100 முதல் 120 சதுரஅடி கொண்ட சிறிய வீடுகளில், 2 குடும்பத்துக்கு ஒரு கழிப்பறை என்று தங்கவைப்பதால், அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதேபோல் கோயில், தேவாலயம் மற்றும் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான இடங்களுக்கான நியாயமான தொகையை நிா்ணயித்து, பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மக்களுக்கே அந்த நிலத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் .

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.16-ம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் வகையில் குடிமனைப்பட்டா கோரும் இயக்கத்தை சென்னையில் நடத்தவுள்ளோம். தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.