ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்...
Published on

சென்னை கோடம்பாக்கத்தில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோடம்பாக்கம் அம்பேத்கா் சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் போதைப் பாக்கு விற்கப்படுவதாக தமிழக காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாரும், அசோக் நகா் நகா் போலீஸாரும் அந்தக் கடையில் திடீா் சோதனை நடத்தினா். அதில், அங்கிருந்து பல கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், அருகே உள்ள அந்தக் கடையின் கிடங்கில் சோதனையிட்டபோது, மொத்தம் 14 மூட்டைகளில் இருந்த போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அந்தக் கடையில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லெக்கம்பட்டியைச் சோ்ந்த ரா.ரகுபதி (28), அவரது உறவினா் மு.வேல்முருகன் (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து வாடகை காரில் போதைப் பாக்குகளை கடத்தி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com